Tuesday, April 17, 2018

தாய்த்தெய்வம் என்னுமோர் அதிதி.... (Mother Goddess in Tamil Culture)

பெருங்கற் ஈமச்சின்னங்களில் அமைக்கப்படும் பறவை போன்ற, தலையற்ற, கல் உருவமானது தாய் தெய்வத்தின் தொல் வடிவமாக தொல்லியல் அறிஞர்களால் கருதப்படுகிறது. இவ்வடிவம் தமிழகத்தில் உடையாநத்தம், மோட்டூர், காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் ஈமக்காடுகளில் காணக் கிடைக்கின்றன. வட இந்தியாவில் செம்பினால் ஆன இத்தகைய வடிவங்கள் ஈமச்சின்னங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன. அவை அதிதி என அங்கு அழைக்கப்படுகின்றன. அதிதி என்பது தொல் தாயின் பெயராக கருதப்படுவது வழக்கம். இவ்வுருவம் ஸ்ரீவத்சத்தின் முந்தைய வடிவமாகும். ஸ்ரீவத்ஸம் தாய் வழிபாட்டோடு இணைந்தது.